Header

Sri Lanka Army

Defender of the Nation

20th September 2019 21:57:11 Hours

இராணுவத்தினரால் மேற்கொண்ட சமூக பணிகள்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மீஹொட மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் இரு அதிகாரிகள் மற்றும் 60 படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வைத்தியசாலை வளாகத்தினுள் இருக்கும் மூலிகைத் தோட்டங்களில் படையினர் இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

ஆயுர்வேத நிர்வாக பிரிவினால் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் உயரதிகாரிகளான பிரிகேடியர் உதித பண்டார, பிரிகேடியர் ஐ பி கத்தனாராச்சி அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

மேலும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65, 651, 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் முழங்காவில் மற்றும் அரவிளந்தகுளம் பிரதேசத்தில் இம் மாதம் 12 – 14 ஆம் திகதி வரை சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டவின் கீழ் 651, 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 (தொ) கஜபா படையணியுடன் 6 சிவிலியன்களுடன் பங்களிப்புடன் முழங்காவில் விநாயகர் முன்பள்ளி வளாகத்தினுள் சிரமதான பணிகளும், 20 ஆவது விஜயபாகு காலாட் படையணியினால் அரவிலந்தன்குளம் யேசு தேவாலயத்தில் 21 படையினரது பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. Nike sneakers | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp