20th September 2019 13:54:34 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது எண்ணக் கருவிற்கமைய 58 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 581 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஹிக்கடுவையிலிருந்து தொடன்டுவ வரையான கடலோர பகுதிகளில் இந்த சுத்திகரிப்பு சிரமதான பணிகள் இம் மாதம் (19) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
இந்த சிரமதான பணிகளில் 125 இராணுவத்தினர், 30 ஹோட்டல் ஊழியர்கள், ஹிக்கடுவை பிரதேச செயலக ஊழியர்கள் 66 பேரும், பொலிஸ் அங்கத்தவர்கள் 8 பேரும் கலந்து கொண்டனர். Adidas shoes | Klær Nike