17th September 2019 18:50:03 Hours
மேஜர் ஜெனரல் H.J செனெவிரத்ன அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆவது படைத் தளபதியாக இம் மாதம் (16) ஆம் திகதி சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு உத்தியோக பூர்வமாக தனது பதவியை நந்திகடாலில் உள்ள தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு 14 ஆவது சிங்கப் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
பின்னர் படைத் தளபதி அவர்களினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரை நிகழ்த்தினார். இந்த பதவியேற்பு நிகழ்வின்போது படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து கொண்டனர்.
புதிய படைத் தளபதி அவர்கள் இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடமை வகித்து இடமாற்றம் நிமித்தம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். buy footwear | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf