17th September 2019 21:00:37 Hours
மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் இராணுவ தொண்டர் படையணியின் புதிய படைத் தளபதியாக சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு கொஸ்கமையிலுள்ள தொண்டர் படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக கையொப்பமிட்டு இம் மாதம் (17) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை தொண்டர் படையணியின் பிரதான பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் கித்சிரி லியனகே அவர்கள் வரவேற்றார்.
பின்னர் தலைமையகத்தின் பிரதி படைத் தளபதி மேஜர் ஜெனரல் L.F கஸ்தூரியாரச்சி அவர்களது தலைமையில் புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி கஜபா படையணியினால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.
தளபதி அவர்கள் தலைமையகத்திற்கு வருகை தந்து மரநடுகையை மேற்கொண்டு பின்னர் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். அதன் போது தொண்டர் படையணியில் நாட்டிற்காக சேவையாற்றி உயிர் நீத்த படை வீரர்கள் மற்றும் நடவடிக்கை பணிகளின் போது காயமுற்ற படை வீரர்களை கௌரவித்து நினைவு கூர்ந்தார். அத்துடன் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பலிலும் கலந்து சிறப்பித்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் தேசிய பாதுகாப்பு படையணியின் மத்திய கட்டளை தளபதி, பிரிகேடியர் ஒருங்கினைப்பு அதிகாரி, கேர்ணல் ஒருங்கினைப்பு அதிகாரி, இராணுவ தொடர்பாடல் அதிகாரி, கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
புதிய தொண்டர் படைத் தளபதி அவர்கள் பாதுகாப்பு தலைமை அதிகாரி அலுவலகத்தில் பதவிநிலை அதிகாரியாக கடமை வகித்து பின்னர் இடமாற்றம் நிமித்தம் தொண்டர் படைத் தலைமையகத்திற்கு நியமிக்கப்பட்டார். முன்னாள் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டதையிட்டு இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். short url link | SUPREME , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信! - パート 5