17th September 2019 21:30:22 Hours
கிளிநொச்சியிலுள்ள அரசபுரகுளம் பிரதேசத்தில் செப்டம்பர் 7 ஆம் திகதி வாவியில் நீராடச் சென்ற தாய் மற்றும் பிள்ளைகளை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டு சமரசங்களை புரிந்த 5 (தொ) பொறியியல் படையணியைச் சேர்ந்த இரு படை வீரர்கள் இம் மாதம் (17) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியை சந்தித்தனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவிற்குரிய ஐந்தாவது பொறியியல் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.G.S அமரசிறி மற்றும் லான்ஸ் கோப்ரல் T.G.J.P ஆரியரத்ன அவர்கள் இந்த வீரச்செயல்களை புரிந்து இராணுவத்திற்கு பெருமையை சேர்த்துள்ளனர்.
குளத்தில் நீராடச் சென்ற போது சேற்றுக்குள் புதைந்து ஆபத்துக்குள்ளான தாயையும் பிள்ளைகளையும் அவர்களது உயிர்களை கூட பொருட்படுத்தாமல் இரண்டு இராணுவ வீரர்கள் காப்பாற்றி பூனகிரி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதை முன்னிட்டு இவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டனர்.
இவர்களது சேவையை கௌரவித்து இராணுவ தளபதியான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இரு படை வீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையை கௌரவித்து வாழ்த்துக்கள் தெரிவித்து சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பாளர் பிரிகேடியர் தம்மிக்க ஜயசுந்தர, 5 பொறியியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் M.A.W.H குமார அவர்களும் இணைந்து கொண்டனர்.
இந்த படை வீரர்கள் இம் மாதம் (16) ஆம் திகதி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களையும் சந்தித்தனர். இவர்களுக்கு படைத் தளபதி இவர்களது சேவைகளை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | Air Jordan Release Dates 2020