Header

Sri Lanka Army

Defender of the Nation

16th September 2019 16:46:19 Hours

கிளிநொச்சி படையினரால் முழுமையாக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள்

இலங்கை இராணுவத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியிலுள்ள வட்டக்கச்சி, முருகானந்த முன்பள்ளிகளில் இரண்டு கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்பட்டு இம் மாதம் (12) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய இந்த கட்டிட நிர்மான பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அதன் கீழுள்ள படையணியான 11 பொறியியல் சேவைப் படையணி, 6 ஆவது சிங்கப் படையணி, 14 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படையினரது பூரன ஒத்துழைப்புடன் முழுமையாக்கப்பட்டது.

இந்த கட்டிடங்கள் வெள்ள அனர்த்தங்களின் போது முழுமையாக சேதமடைந்திருந்தது பின்னர் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட 10.7 மில்லியன் ரூபாய் நிதி செலவில் இராணுவத்தினால் கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்பள்ளி கட்டிட திறப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வருகை தந்து இந்து கலாச்சார முறைப்படி மங்கள விளக்குகட்டிடங்களை திறந்து வைத்தார்.

மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு எஸ் அருமைநாயகம், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, 57, 573 ஆவது படைத் தலைமையகத்தின் தளபதிகள், கிளிநொச்சி கல்வி வலய பணிப்பாளர், அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர். latest Nike release | Nike Shoes