12th September 2019 10:02:28 Hours
கலாஓயா, சாலியவெவையில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் பயிற்சி நிறைவு விழா இம் மாதம் (7) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த பயிற்சி நிறைவு விழாவிற்கு பிரதம அதிதியாக இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் W.M.R.J.K சேனாரத்ன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
நிறைவு விழாவில் தற்பாதுகாப்பு, உடற்பயிற்சி கண்காட்சிகள் பார்வையாளர்களுக்கு முன் வைக்கப்பட்டன. இடம்பெற்ற பயிற்சியில் அனைத்து துறைகளிலும் திறமைகளை. வெளிக்காட்டிய போர் வீரனாக H.N.D.T சமரகோன் அவர்களும், சிறந்த துப்பாக்கி சூட்டு வீரனாக கெப்டன் W.A.H.D விஜயரத்ன அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு பிரதம அதிதி அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பின்னர் பிரதம அதிதி படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.affiliate link trace | Sneakers