Header

Sri Lanka Army

Defender of the Nation

30th August 2019 13:05:07 Hours

கெடெற் அதிகாரிகள் கல்வி சுற்றுலா நிமித்தம் படைத் தலைமையகங்களுக்கு விஜயம்

இலங்கை இராணுவ எகடமியில் அதிகாரி இலக்கம் – 87 இன் கீழ் பயிற்சியை மேற்கொள்ளும் 39 கெடெற் அதிகாரிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கு கல்வி சுற்றுலா நிமித்தம் ஆகஸ்ட் மாதம் 27 – 28 ஆம் திகதிகளில் விஜயத்தை மேற்கொண்டனர்.

கிளிநொச்சி தலைமையகத்திற்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது சார்பாக நிர்வாக பிரதானி பிரிகேடியர் எச்.எம்.என் ஹேரத் அவர்கள் வரவேற்றார். பின்னர் கிளிநொச்சி தலைமையகத்தின் பதவிநிலை 11 அதிகாரியினால் கெடெற் அதிகாரிகளுக்கு பங்கேற்பு பணிகள், தலைமையக வரலாறு மற்றும் பொறுப்புகள் பற்றிய விரிவான விளக்கத்தை முன்வைத்தார்.

இறுதியில் விஜயத்தை மேற்கொண்ட கெடெற் அதிகாரிகளுக்கு நிர்வாக பிரதானி பிரிகேடியர் அவர்களினால் நினைவுச் சின்ன பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த கெடெற் அதிகாரிகளை முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களது சார்பாக பொது நிர்வாக அதிகாரி பிரிகேடியர் திலக் வீரக்கோன் அவர்கள் வரவேற்றார். பின்னர் பதவி நிலை அதிகாரி 1, 11 தரத்திலிருக்கும் அதிகாரிகளினால் பணிகள் தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன.மேலும் 12 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 593, 591 ஆவது படைத் தலைமையகத்தின் பிரிக்கட் மேஜர்கள் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான விரிவுரைகளையும் இந்த படையினர்களுக்கு முன் வைத்தனர். அதனை தொடர்ந்து கெடெற் அதிகாரிகளுக்கு இவர்களது வருகையை நினைவு படுத்தும் முகமாக நினைவு சின்னங்களும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டன.

ஆகஸ்ட் மாதம் 28 – 29 ஆம் திகதிகளில் யாழ் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட கெடெற் அதிகாரிகளை அத்தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் அவர்கள் வரவேற்றார். பின் இவர்கள் யாழ் குடா நாட்டின் அபிவிருத்தி பணிகள் மற்றும் கடமைகள் தொடர்பான விரிவுரைகள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த கெடெற் அதிகாரிகள் யாழ் குடா நாட்டிலுள்ள கோட்டை, அராலி, பூனாலை குளம் மற்றும் நகுலேஷ்வரம் ஆலயத்திற்கு சுற்றுலாவை மேற்கொண்டனர். Sport media | adidas Yeezy Boost 350