Header

Sri Lanka Army

Defender of the Nation

31st August 2019 13:09:45 Hours

புதிய இராணுவ சேவா வணிதா தலைவியின் பதவியேற்பு நிகழ்வு

இராணுவ சேவா வணிதா பிரிவின் 15 ஆவது தலைவியாக திருமதி சுஜீவ நெல்சன் கடந்த வியாழக் கிழமையன்று(29) சமய ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமையினை நாரஹேன்பிட்டவிலுள்ள அலுவலகத்தில் வைத்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் உடவெ டம்மலோக்க தேரரின் தலைமையில் மஹாசங்க மதகுருவினர்களால் செத் பிரித் நிகழ்வானது நடாத்தப்பட்டதுடன் புதிய இராணுவ சேவா வணிதா தலைவி நாரஹேன்பிட்டவிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும் புதிய இராணுவ சேவா வணிதா தலைவியவர்கள் இலங்கை படைக்களச் சிறப்பணியின் சேவா வணிதா பிரிவின் தலைவி மற்றும் இராணுவ சேவா வணிதா பிரிவின் நிர்வாக அலுவலக பொறுப்பாளருமான திருமதி ஷிரோமி லியனகே அவர்களினால் வரவேற்கப்பட்டார். அதன் பின்னர் சேவா வணிதா தலைவி எதிர்காலத்தில் தான் மேற்கொள்ளவுள்ள திட்டங்களுக்கு ஒவ்வொருவரின் ஆதரவினையும் கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து அனைத்து படையணியின் சேவா வணிதா பிரிவின் தலைவிகளும் குறித்த இந்நிகழ்விற்கு வருகைதந்து குழு புகைப்படத்தில் கலந்துகொண்டதோடு, விருந்துபசாரத்திலும் பங்கேற்றினர். latest Nike release | Nike