Header

Sri Lanka Army

Defender of the Nation

27th August 2019 14:25:02 Hours

ரணவிரு எபரலில் ‘மன ஆரோக்கியம்’ தொடர்பாக செயலமர்வு

யக்கலையில் அமைந்துள்ள ரணவிரு எபரல் தையல் மத்திய நிலையத்திலுள்ள படையினர்களுக்கு ‘மன ஆரோக்கியம்’ தொடர்பான செயலமர்வு இடம்பெற்றது.

இந்த செயலமர்வானது ரணவிரு எபரல் தையல் மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள மனதுங்க அவர்களது வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றன.

சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திரு ஹேமா நிஷாந்த , புனர்வாழ்வு மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி திரு. காமினி சுபசிங்க மற்றும் சுகாதார மனநல தகவல் அதிகாரி திருமதி. கல்ஹாரி குமாரி போன்றோர் செயலமர்வில் விரிவுரைகளை மேற்கொண்டனர்.

இந்த செயலமர்வில் தற்கொலைகள், அல்க்கோல் மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு, மன அழுத்த மேலாண்மை, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் திருமணமாகி மகிழ்ச்சியான வாழ்க்கை போன்ற தலைப்புகளின் கீழ் விளக்கங்கள் படையினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Mysneakers | Nike Running