27th August 2019 15:45:02 Hours
விஜயபாகு காலாட் படையணியினால் 17 ஆவது தடைவையாக மேற்கொள்ளப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான விஜயபாகு மோட்டார் குரோஷ் பந்தயப் போட்டிகள் இம் மாதம் (25) ஆம் திகதி போயகனை விஜயபாகு காலாட் படையணி ஓட்டப்பந்ததிடலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் வருகை தந்தார். அத்துடன் அதிதியாக பிரதி பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களும் வருகை தந்தார். இவர்களை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன அவர்கள் வரவேற்றார்.
இந்த போட்டியில் 125 உள்நாட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களும், ஜப்பான், தாய்லாந் மற்றும் இந்திய நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு சிறப்பு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் பங்கேற்றிக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் 13 பிரிவுகளின் கீழ் வெவ்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இலங்கை இராணுவ தளபதியின் வெற்றி கிண்ணத்தை இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மதுர பீரிசும், படைத் தளபதி வெற்றி கிண்ணத்தை ஜப்பான் வீரரும் பெற்றுக் கொண்டனர். இந்தாண்டில் சிறப்பு ஸ்டன்ட் மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்களாக கேஷர கொடகே மற்றும் வினுஷ்க திரிமல்ஷா சில்வா அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விஜயபாகு மோட்டர் குரோஷ் மூலம் பெற்றுக் கொள்ளும் நிதிகள் விஜயபாகு காலாட் படையணியின் நலன்புரி திட்டங்களுக்காக பயண்படுத்தப்படும். . Best jordan Sneakers | THE SNEAKER BULLETIN