27th August 2019 13:02:04 Hours
நாட்டிற்காக அவயங்களை இழந்து விஷேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தங்கியிருந்து வைத்திய வசதிகளை மேற்கொள்ளும் நலன்புரி நிலையமான மிஹிந்து செத்மெதுரவிற்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம்மாதம் (23) ஆம் திகதி உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
அத்திடியவிலுள்ள இந்த மத்திய நிலையத்தில் தற்போது 50 இராணுவ வீரர்கள் சுகையீனமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இராணுவ தளபதியின் இந்த விஜயத்தின் போது தளபதியின் பாரியாரும் இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்ஷன் மற்றும் அவரது மகள்மாரும் சென்றிருந்தனர்.
மிஹிந்து செத்மெதுரவிற்கு வருகை தந்த இராணுவ தளபதியை இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன, புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ராஜகருணா மற்றும் அவரது பாரியாரான திருமதி ராஜகருணா மற்றும் மிஹிந்து செத்மெதுர மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஜீவன் குணசேகர அவர்கள் வரவேற்றனர்.
பின்னர் இராணுவ தளபதி அவர்கள் இராணுவ வீரர்கள் தங்கியிருக்கும் வாட்டுகளுக்கு சென்று அவர்களது நலன்புரி விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு பரிசு பொதிகைகளையும் வழங்கி வைத்தார்.
இாணுவ தளபதிக்கு நன்றியுணர்வையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில், இங்குள்ள படைவீரர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாடல்கள் நடனங்களை இராணுவ தளபதிக்கு முன்வைத்தனர். அச்சமயத்தில் இங்கிருந்த படை வீரர்கள் சக்கர நாற்காலியில் இருந்த வன்னம் நடனங்களை மேற்கொண்டனர்.
இறுதியில் இராணுவ தளபதி அவர்கள் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்தில் கையொப்பமிட்டு இந்த மத்திய நிலையத்தை எதிர்வரும் காலங்களில் மேலும் முன்னேற்றி மருத்துவ மற்றும் மனநிலை பராமரிப்பு நிலையங்களை அமைப்பதாக இராணுவ வீரர்களுக்கு உறுதியளித்தார்.
இராணுவ தளபதியின் இந்த விஜயத்தின் போது இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர மாஸ்டர் ஜெனரல் போர்கருவி மேஜர் ஜெனரல் H.G.I வித்தியானந்த அவர்கள் இணைந்திருந்தனர். jordan Sneakers | Nike