26th August 2019 14:07:55 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயம்பதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் அநுராதபுரத்தில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 300 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் இம் மாதம் (15) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியா சிவலோகநாதன் நிதி அமைப்பு, திருமதி சுவீனீத வீரசிங்க மற்றும் திரு. நந்தலால் மாலஹொட அவர்களது அனுசரனையுடன் இந்த மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுகள் 21 ஆவது படைப் பிரிவின் சிவில் தொடர்பாடல் அதிகாரி அவர்களது பூரன ஒத்துழைப்புடன் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் 211, 212 ஆவது கட்டளை தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். jordan release date | Nike