Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2019 09:03:19 Hours

கிளிநொச்சியில் படையினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 651, 652 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சமூக பணிகள் இம் மாதம் 11 – 13 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

651 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 11 (தொ) கஜபா படையணியினால் கரியலங்கபட்டுவன் மீனவ சமூக நிலைய வளாகம் மற்றும் கரியலங்கபட்டுவன் விரவன் கோயில் வளாகத்தினுள் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 7 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் அக்கராயன்குளம் பிள்ளையார் கோயிலில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் 653 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 17 (தொ) இலேசாயுத காலாட் படையணியினால் துனுக்காய் ஆயுர்வேத நிலைய வளாகம் 40 படை வீரர்களின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சமூக பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய இடம்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். bridgemedia | Nike Air Max 270 - Deine Größe bis zu 70% günstiger