Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2019 10:06:07 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் முன் வைக்கப்பட்ட கண்காட்சி

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட நவீன கண்டு பிடிப்பு கண்காட்சிகள் தியதலாவையிலுள்ள இராணுவ எகடமி டோச் சினிமா சாலையில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றன.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 11, 12 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த படையினரால் 31 புதிய கண்டு பிடிப்பு கண்காட்சிகள் பார்வையாளர்களுக்கான முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சி நிகழ்வினை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை பிரதானி பிரிகேடியர் S.M.S.P.B சமரகோன் அவர்கள் வருகை தந்து திறந்து வைத்தார்.

படையினரால் முன்வைக்கப்பட்ட கண்காட்சிகளை பரிசீலனை செய்வதற்கு ஊவா வெல்லச பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் D.P.R.E காலிதாஸ, சிரேஷ்ட விரிவுரையாளர் S.T.I விமலதாஸ, இராணுவ பரிசீலனை மீளாய்வு பணியகத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் குணசேன அவர்கள் வருகை தந்து பார்வையிட்டு படையினரால் முன் வைக்கப்பட்ட சிறந்த கண்டுபிடிப்பு கண்காட்சிகளை தேர்ந்தெடுத்தனர்.

இந்த கண்காட்சியில் மிகவும் குறைந்த செலவில் வாகனம் மற்றும் கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் இயந்திரத்தை (Painting machine) நிர்மானித்த 10 (தொ) பொறியியல் சேவைப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் D.A.C குமார, அவர்கள் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டார். Running sports | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ