Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd August 2019 11:03:30 Hours

வன்னி பாதுகாப்பு படையினரால் கட்டிட நிர்மான பணிகளுக்கு ஒத்துழைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குணவர்தன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் புகழ் பெற்ற பாடகரான திரு சுனில் எதிரிசிங்க, முன்னாள் கிரிக்கட் வீரர் திரு திலகரத்ன தில்ஷான் மற்றும் திரு அநுர எலியபுர அவர்களது அனுசரனையில் ‘ஜாதிக உருமயன் சுரக்கிம மஹா சம்மேளனய தொணிப் பொருளின் கீழ் இரட்டபெரியகுளம் அலகல்ல பிரதேசத்தில் திருவேகம ஶ்ரீ போதிருக்ராம விகாரை நிர்மானிப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இம் மாதம் (20) ஆம் திகதி இடம்பெற்றது.

திருவேகம ஶ்ரீ போதிருக்ராம விகாரையின் விகாராதிபதியின் தலைமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பௌத்த பக்தர்கள் மற்றும் படையினரது பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாகொட அமைப்பின் பூரண ஒத்துழைப்புடன் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபதிரன அவர்களது தலைமையில் இந்த விகாரைகள் அமைப்பதற்கான இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த அடிக்கல் நாட்டி விழாவிற்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரி லெப்டின ன்ட் கேர்ணல் லால் கித்சிறி, 211 ஆவது படைத் தலைமையகத்தின் இராணுவ தொடர்பாடல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சமிந்த திசாநாயக மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பக்தர்கள் கலந்து கொண்டனர். Running sports | nike fashion