Header

Sri Lanka Army

Defender of the Nation

26th August 2019 13:03:55 Hours

புதிய இராணுவ பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமிப்பு

மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே WWV RWP VSV USP ndc psc அவர்கள் இலங்கை இராணுவத்தின் 54 ஆவது இராணுவ பதவிநிலை பிரதானியாக இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவ செயலணியினால் நியமிக்கப்பட்டார். லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இராணுவ தளபதியாக பதவியேற்றதன் பின்பு இந்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இவர் இலங்கை படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதியும், தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மற்றும் கூட்டுப்படைத் தளபதியுமாக இருந்து தற்போது இராணுவ பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சத்யபிரிய துலனபேம தலாரம்பே லியனகே அவர்கள் இராணுவத்தில் விஷேட விருதான வீர விக்ரம விபூஷண பதக்கத்தை பெற்ற அதிகாரியாவார்.

இவர் கொழும்பு தேஷ்டன் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டுள்ளார். கல்லூரியில் கிரிக்கட், ரக்பி, கால்பந்து விளையாட்டு துறைகளில் சிறந்து விளங்கியதுடன் கெடற் பிரிவிலும் அங்கம் வகித்துள்ளார். இவரது பாடசாலை படிப்பின் பின்பு 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை இராணுவ நிரந்தர படையில் இணைந்து தியதலாவையிலுள்ள இராணுவ எகடமி கெடெற் அதிகாரி பயிற்சி நிறைவின் பின்பு 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி 1 ஆவது படைக்கலச் சிறப்பணியில் உட்புகுத்தப்பட்டார்.

இராணுவத்தில் 35 வருட காலங்கள் சேவைகள் புரிந்து இராணுவத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகித்துள்ளார். 4 ஆவது படைக்கலச் சிறப்பணி, திருகோணமலை நகரத் தளபதி, 523 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாகவும், 55 ஆவது கலாட் படைப் பிரிவின் பிரதி படைத் தளபதியாகவும், அதிரடி படை – 3 மனிதாபிமான நடவடிக்கைகளிலும், 52, 64 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

அத்துடன் பதவிநிலை அதிகாரி, இராணுவ செயலனியில் கேர்ணல் தரத்திலும், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை பிரிகேடியராகவும், பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அலுவலகத்தின் நடவடிக்கை பணிப்பாளராகவும், பாதுகாப்பு அமைச்சில் இராணுவ தொடர்பாடல் அதிகாரியாகவும், மாஸ்டர் ஜெனரல் போர்கருவி பணிப்பாளர் நாயகமாகவும் தலைமையகங்களில் பதவி வகித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து வெளிநாடுகளில் சிறப்பு பயிற்சிகளான இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி, பயிற்றுவிப்பாளர், இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை, பாகிஸ்தானில் இராணுவ துறைசார், பங்களாதேஷத்தில் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிநிலை, அடிப்படை பயிற்சி அமெரிக்காவிலும் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரிகளில் கற்கை நெறிகளையும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் பண்டாரநாயக கல்வி நிறுவனத்திலும், இந்தியாவில் பாதுகாப்பு முகாமைத்துவம், மாஸ்டர் டிக்ரி, இந்தியா மதுரை பல்கலைக்கழகத்தில் தத்துவம், பட்டப்படிப்புக்களை மேட்கொண்டுள்ளார். ஆசியா மற்றும் அமெரிக்கா வொஷிங்டன், மாலைதீவு போன்ற நாடுகளில் இடம்பெற்ற மகாநாடுகளில் கலந்துள்ளார்.

மேஜர் ஜெனரல் லியனகே இலங்கை இராணுவத்தில் ஆற்றிய சேவையை கௌரவித்து இவருக்கு வீர விக்ரம விபூஷணம், இரண விகரம பதக்கம், பூரண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், இராணுவ 50 ஆண்டு விழா பதக்கம், மனிதாபிமான நடவடிக்கை மற்றும் 50 ஆவது சுதந்திரதின பதக்கங்களை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவ கிரிக்கட், ரக்பி மற்றும் கால்ப்பந்து அணிகளில் 1984 – 1994 ஆண்டு வரை காலம் விளையாட்டு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டி சிறந்து விளங்கினார்.

இவர் சிரோமி லியனகே அவர்களை திருமணம் செய்து இவருக்கு ஒரு மகள் உள்ளார். ஸ்கோஷ் மற்றும் டெனிஷ் விளையாட்டுகளிலும், இசையும் மிகவும் ஆர்வத்துடன் விரும்புவார். latest jordan Sneakers | Jordan Release Dates , Iicf