23rd August 2019 12:03:30 Hours
இலங்கை கஜபா படையணியின் ஏற்பாட்டில் இலங்கை ஒடோஸ்பொட் ட்ரைவர்ஷ் அசோஷியேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் 2019 ஆம் ஆண்டிற்கான 'கஜாபா சூப்பர் குரோஷ்’ போட்டிகள் அநுராதபுரம் சாலியபுர ஓட்டப்பந்தய திடலில் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது.
கஜபா சுபர் குரோஷ் தொடர்பான ஊடக சந்திப்பொன்று இலங்கை மின்சார பொறியியல் படையணி தலைமையக அதிகாரி விடுதியில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அலுவலகத்தின் பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்களது தலைமையில் இம் மாதம் (22) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது கஜபா படையணியைச் சேர்ந்த அதிகாரிகள், படை வீரர்கள், விஷேட தேவையுடைய படை வீரர்கள் மற்றும் குடும்ப அங்கத்வர்களது நலன்புரி தேவைகளின் நிமித்தம் இந்த கஜபா சுபர் குரோஷ் போட்டியிலிருந்து கிடைக்கப்பெறும் நிதிகள் பயண்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கை மோட்டர் குரோஷ் போட்டியானது 1993 ஆம் ஆண்டு இராணுவ எகடமியின் தளபதி மேஜர் ஜெனரல் காமினி குணசேகர அவர்களின் தலைமையில் முதலில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து கஜபா படையணியின் படைத் தளபதியான இந்த அதிகாரியினால் கஜபா சுபர் குரோஷ் போட்டியானது 1999 ஆம் ஆண்டு அநுராதபுரம் சாலியபுரையின் ஆரம்பிக்கப்பட்டது.
சாலியபுரையில் ஓட்டப்பந்த திடலுக்கான ஒழுங்குகளை திறன்பட அமைத்ததற்காக மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்கள் திரு ஹன்ஸ் ரல்ப் கார்பின்ஸ்கைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கஜாபா சுப்பர் குரோஷ் மோட்டார் பந்தயத்திற்கு ஆரம்பத்திலிருந்து தனது பாரிய ஒத்துழைப்பையும் முயற்சியையும் வழங்கியவர் ஆவர்.
இம்முறை இடம்பெறும் 2019 ஆம் ஆண்டு மோட்டார் பந்தய போட்டிகளிற்க்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுணர்கள் 200 பேர் பங்கேற்றிக் கொள்ளவுள்ளனர். அத்துடன் 24 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் இடம்பெறும் என்று ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி அலுவலகத்தின் பொது பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ, கஜபா படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஒடோஸ்பொட் ட்ரைவர்ஷ் அசோஷியேஷன் நிறுவனத்தின் பிரதி தலைவர் திரு ஜோக பெரேரா மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.
மேலும் இந்த கஜபா சுபர் குரோஷ் பந்தய போட்டிகளிற்கு எயார் வைஷ் சரவதேச நிறுவனம், சிங்கர் ஶ்ரீ லங்கா பிஎல்சி, ஹட்ச் டெலிகோம், சீட் களனி ஹோல்டிங் தனியார் நிறுவனம், லங்கா வைத்தியசாலை, இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், ஏபிசி நெட்வேக் (கிரு எப்எம் அலை வரிசை), விஜய பத்திரிகை நிறுவனத்தினர் ஊடக அனுசரனைகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best jordan Sneakers | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf