Header

Sri Lanka Army

Defender of the Nation

20th August 2019 11:10:50 Hours

புதிய படைத் தளபதி பதவியேற்பு

கொமாண்டோ படையணியின் 14 ஆவது புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் பிரதீப் டி சில்வா அவர்கள் கனேமுல்லையிலுள்ள கொமாண்டோ படைத் தலைமையகத்தில் தனது புதிய பதவியை இம் மாதம் (20) ஆம் திகதி பதவியேற்றார்.

முன்னாள் இந்த படையணியின் படைத் தளபதி இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு கொமாண்டோ படையணியிக்கு இந்த புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.

மஹா சங்கதேரரின் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுக்கு பின்னர் மேஜர் ஜெனரல் பிரதீப் சில்வா அவர்கள் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி பிரிகேடியர் உதித பண்டார, கொமாண்டோ பிரிக்கட் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் அனில் சமரசிறி, மத்திய கட்டளை தளபதி கேர்ணல் சியாமல் சில்வா போன்றோர் இணைந்திருந்தனர். bridgemedia | Air Jordan 1 Retro High OG Retro High OG Hyper Royal 555088-402 , Fitforhealth