Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2019 22:36:54 Hours

படைத் தளபதி அவர்கள் 7 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு விஜயம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளவாடங்கள் கட்டளை தலைமையகத்தின் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் D.K.G.D சிறிசேன அவர்கள் தியதலாவையிலுள்ள 7 ஆவது இராணுவ பொலிஸ் படையணிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

7 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் K.C.P.K விதானகே அவர்களது அழைப்பையேற்று படைத் தளபதி இந்த விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு வழங்கி வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை மேற்கொள்ளப்பட்டு தலைமையக வளாகத்தினுள் புதிதாக நிர்மானிக்கப்பட்ட நலன்புரி கட்டிட தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டன.

இறுதியில் படைத் தளபதி படையினர் மத்தியில் உரையும் நிகழ்த்தினார். இச்சந்தர்ப்பத்தில் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் இளங்க்கோன் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து கொண்டனர். Adidas shoes | Patike