Header

Sri Lanka Army

Defender of the Nation

17th August 2019 23:45:54 Hours

புதிய பொறியியல் சேவைப் படையணியின் படைத் தளபதி பதவியேற்பு

பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் ஆர் கனேகொட அவர்கள் இம் மாதம் (10) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை மத்திய கட்டளை தளபதி கேர்ணல் K.M.S குமார அவர்கள் வரவேற்றார். பின்பு புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வரவேற்கப்பட்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி முதலில் தலைமையகத்தில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்திற்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி கௌரவ அஞ்சலியையும் செலுத்தி அதன் பின்பு தலைமையகத்தில் அனைவரது பங்களிப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட பகல் விருந்தோம்பலிலும் கலந்து கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ பொறியியல் சேவை பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Asics shoes | Marki