Header

Sri Lanka Army

Defender of the Nation

13th August 2019 17:03:48 Hours

இராணுவ வைத்தியசாலையில் பௌத்த மத சங்க தான நிகழ்வுகள் முன்னெடுப்பு

கொழும்பு நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் சங்க தான (அன்னதான நிகழ்வு) 100 பௌத்த மத தேரர்களின் பங்களிப்போடு கடந்த திங்கட் கிழமை (12) இவ் வைத்தியசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வுகள் இலங்கை இராணுவ வைத்தியப் படையணி மற்றும் இராணுவ சுகாதார சேவைகளின்; பணிப்பாளர் இராணுவ வைத்தியசாலையின் நிர்வாக பணிப்பாளர் மற்றும் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றோரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முதசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று நவகோரள பிரதேசத்தின் பிரதான சங்க நாயக்க தேரரான மதிப்பிற்குறிய திவ்வியகஹா ஜஷஷி நாயக்க தேரர் மற்றும் பல பௌத்த மத தேரர்கள் கலந்து கொண்டனர்.

மஹா சங்க தேரர்களால் முன்னனெடுக்கப்பட்ட மத வழிபாடுகள் மேஜர் ஜெனரல் முதசிங்க அவர்களால் விளக்கேற்றப்பட்டு ஆரம்பிக்கபட்டது.

இந் நிகழ்வுகளில் இராணுவ வைத்தியப் படையணியின் தளபதியான பிரிகேடியர் (கலாநிதி) டீ டி என் முதசிங்க இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளரான கேர்ணல் கே பி என் பதிரன மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். latest Nike Sneakers | Air Jordan Retro - 2021 Release Dates + Preview , Fitforhealth