Header

Sri Lanka Army

Defender of the Nation

11th August 2019 18:45:46 Hours

கிழக்கு படையினர்களால் 100 க்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பு கண்காட்ச்சி

கிழக்கு பாதுகாப்பு படையினர்களின் புதுமையான திறமையால் வடிவமைக்கப்பட்ட கண்டுபிடிப்பு கண்காட்சிகள் கடந்த (09) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொலன்னருவையில் அமைந்துள்ள புலதிசி தேசிய கல்வியியல் கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. இக் கண்காட்ச்சியானது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் கருத்தின்படி அனைத்து படையினர்களின் புதுமையான தயாரிப்புகளின் கண்காட்சி அடிப்படையில் சாத்தியமானதக கருதப்படுகின்றது.

கிழக்கு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் ஊக்குவிப்புடன் இப் புதிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் கிழக்கு படையினர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இப் புதிய கண்டுபிடிப்புகள் கிழக்கு படையினர்களின் படைப்பு திறன்களிலிருந்து 100 க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்காட்சிப்படுத்தியதுடன், நாள் முழுவதும் பெரும் திரலான மக்கள் இக் கண்காட்ச்சிகளை பார்வையிட அந்த இடத்திற்கு வருகை தந்தனர். இதில் சிறந்த கண்டுபிடிப்பாளர்களை நீதிபதிகள் குழுவினரால் தேந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன், இன்னும் பலர் திறமையன படைப்பாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின் திறப்பு நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் முன் நோக்கு ;பாதுகாப்பு பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த மொதல்ல மற்றும் 24 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் அதுல மாரசிங்க, புலத்சிரி தேசிய கல்வியற் கல்லூரியின் தலைவி திருமதி மதரராராச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். url clone | Nike Shoes