Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2019 15:25:16 Hours

56 ஆவது படைப் பிரிவினரால் பொதுமக்களுக்கு 1000 தென்னங்கன்றுகள் வினியோகம்

இராணுவத்தின் 56 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தினரின் ஒருங்கிணைப்பில் கடந்த (04) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெலிபன் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தினரால் இராணுவம் நடத்தி வரும் மரம் நடுகை திட்டத்தின் கிழ் வவுனியா மற்றும் கோகிலாய் போன்ற பகுதிகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு 1000 தென்னங்கன்றுகளை வழங்கினர்.

இந்த திட்டமானது 56 படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் எச்.பி.செனவிரத்ன அவர்களின் முன்முயற்சியால் பொது மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு பொருளாதார நோக்கங்களை மேம்படுத்தும் நிமித்தம் இக் கன்றுகள் வழங்கப்பட்டன.

அந்த மரக்கன்றுகளை நன்கொடையாக வழங்கும் நிகழ்விற்கு (ஓய்வூ) மேஜர் ஜெனரல் மென்தக சமரசிங்க அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் பிரதம அதிதியாக 56 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி அவர்கள் கலந்து கொண்டதுடன் நன்கொடையாளர்கள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும், 561 ஆவது மற்றும் 563 ஆவது படைப் படைப்பிரிவு தலைமையகத்தின் தளபதிகள், பல அரசு நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர். Nike shoes | 『アディダス』に分類された記事一覧