Header

Sri Lanka Army

Defender of the Nation

09th August 2019 15:05:16 Hours

இராணுவ அதிகாரிகளுக்கு கடமைகள் தொடர்பான பயிற்ச்சி பட்டறை

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் தரம் 3 அதிகாரிகளுக்கான 'பணியாளர் கடமைகள்' தொடர்பான இரண்டு நாள் பயற்ச்சி பட்டறை கடந்த ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி மற்றும் -7ஆம் திகதிகளில் அரசபுரகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாலியன் பயிற்சி முகாமின் 66 ஆவது படைப் பிரிவு தலமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் மங்கள விஜேசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இடம் பெற்றன.

எதிர்காலத்தில் கட்டளை அதிகாரிகளாக நியமிக்கப்படும் இராணுவ அதிகாரிகளுக்கு பணியாளர்கள் நியமனங்கள், பணியாளர்களின் முன்னேற்றத்தை குறித்த தனிப்பட்ட அறிவை மேம்படுத்துவதற்கும் சேவையில் எழுத்து திறன்களை மேம்படுத்துவதற்கும், நடுத்தர அதிகாரிகளிடையே செயல்பாட்டு பணியாளர்களின் பணியை மேம்படுத்துவதற்கும் இப் பயிற்ச்சி பட்டறை ஓழுங்கமைக்கப்பட்டதுடன், இதில் 26 இளம் இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப் பயிற்சி பட்டறையின் நிறைவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கு பிரதான அதிதியாக 662 ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் பி.ஆர்.பத்திரிவித்தன அவர்கள் கலந்து கொண்டார். Best Authentic Sneakers | Air Jordan Release Dates Calendar