Header

Sri Lanka Army

Defender of the Nation

08th August 2019 13:06:20 Hours

ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் எம்எம் கீத்சிரி அவர்களுக்கு மரியாதை வழங்கும் நிகழ்வு

33 ஆண்டுகள் இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று செல்லும் உளவியற் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்எம் கீத்சிரி அவர்களுக்கு மரியாதை வழங்கும் நிகழ்வானது பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் (06) ஆம் திகதி இடம் பெற்றன.

அத்துடன் இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் படையணியினரால் படையணியின் படைத் தலைமையகத்தில் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலேசாயுத காலாட் படையணியில் மரணித்த போர்வீரர்களை நினைவுபடுத்தி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் எம்எம் கீத்சிரி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி; இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் எச்.டி.ஜீ ரனசிங்க மற்றும் கேர்ணல் டி.ஏ.கே திசாநாயக அவர்கள் தலைமை தாங்க இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, ஓய்வுபெற்று செல்லும் மேஜர் ஜெனரல் எம்.எம். கித்சிரி அவர்கள் படையினர்களுடன் குழு புகைப்படத்தில் கலந்துகொண்டதுடன் படையினர்களுக்கு உரையாற்றினார். உரையின் போது, படையணியில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினர்களும் தனக்கு வழங்கிய ஆதரவு மற்றும் அர்ப்பணிப்புக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் கலந்து கொண்ட அவருக்கு அவரின் சேவையைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டதுடன் அவரின் பாரியார் திருமதி ருக்மி லோகுபதிராகே அவர்களுக்கும் பாராட்டு பரிசு வழங்கினார்.

அடுத்த நாள் காலை, ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் எம்.எம். கித்சிரி அவர்கள் கௌரவ மரியாதை வணக்கங்களுடன் தலைமையகத்தில் இருந்து விடைபெற்றார். Sportswear Design | Asics Onitsuka Tiger