Header

Sri Lanka Army

Defender of the Nation

05th August 2019 12:08:51 Hours

‘கொமாண்டோ சவால் -2019’ ஆண்டிற்கான மோட்டார் வாகன ஓட்டப் போட்டி

‘கொமாண்டோ சவால்-2019’ ஆண்டிற்கான மோட்டார் வாகன ஓட்டப் போட்டியானது, குடா ஓயாவில் கடந்த ஞாயிறு (4) பெருமளவிலான ரசிகர்களின் முன்னிலையில் இடம் பெற்றது.

கொமாண்டோ படையணியின் படைத் தளபதியும், கொமாண்டோ சவால் போட்டியின் தவிசாளரும் மற்றும் இராணுவ பதவி நிலை பிரதாணியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கொமாண்டோ படையணியின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை மோட்டார் வாகன போட்டி சங்கத்தின் ஊளியர்கள் உட்பபட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் இப்போட்டியானது சிலடார் மற்றும் ஸ்ரீ லங்காவின் இணை ஏற்பாட்டில் துட்டகைமுணுவின் விரர்களின் நீண்டகால வரலாறைக் கொண்ட இடத்தில் இடம் பெற்றது.

அதனைத் தொடந்து, சிலடார் மேற்பார்வையில் 13 ரேசிங் கார் மற்றும் 12 மோட்டார் சைக்கில்கள் மூலம் நாட்டில் உள்ள திறமையான வேகமான வாகன ஓட்டப் போட்டியாளர்கள் இப்போட்டியில் போட்டியிட்டனர்.

மேலும், இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள், பரிசுகள், மற்றும் பண பரிசில்கள் முதலியன மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் வழங்கப்பட்டன. bridge media | GOLF NIKE SHOES