Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd August 2019 15:00:01 Hours

மத பிரமுகர்களுக்கும் படையினர்களுக்கும் இடையிலான சந்திப்பு

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 66 ஆவது காலாட்படைப் பிரிவின் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் மத பிரமுகர்களுக்கும் இடையிலான நல்லுறவுவை மேம்படுத்திகொள்ளும் சந்திப்பு கடந்த (30) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 662 ஆவது காலாட்படை படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் சந்திப்பானது 662 ஆவது காலாட்படை படைத் தளபதி கேணல் ரவி பதிரவித்தான அவர்களின் வழிகாட்டலுக்கமைய ஏற்பாடுசெய்யப்பட்டது. அத்துடன் நல்லிணக்கம் மற்றும் குறிப்பிட்ட வசிப்பிடத்திற்கு ஏற்றவாறு பல கருத்துக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்த சந்திப்பில் 3 கிறிஸ்தவ தேவலயத்தின் மத போதகர்களும், 17 இந்து மத குருக்களும் அவர்களுடன் கேணல் ரவி பதிரவித்தான, 1 ஆவது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 20 ஆவது இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி, 662 ஆவது காலாட்படை படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள், பட்டாலியன்களின் கீழ் கட்டளை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக சிவில் மற்றும் இராணுவ திட்டங்கள், செயற்பட்டுகொண்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள், சட்டவிரோத வணிகங்கள் பொதுமக்களின் பொருளாதார தரத்தை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிலையான தகவல்தொடர்பு சேனல்களைப் பராமரித்தல் போன்றவை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இராணுவ அதிகாரிகளால் விரிவுரைபடுத்தப்பட்டன.

அதன் பின்னர், மத பிரமுகர்களால் இராணுவத்தினரின் முயற்சிகளைப் பாராட்டி படையினர்களுக்கு தங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்க உறுதியளித்ததுடன் அந்த சந்தர்ப்பத்தில் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்த இராணுவத்திற்கு நன்றி தெரிவித்தனர். latest jordans | Autres