02nd August 2019 14:45:01 Hours
விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாண விவசாய அமைச்சினால் கண்டி நகரத்தினுள் சுத்திகரிப்பு பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
வருடாந்த தலதா மாளிகை திருவிழாவை முன்னிட்டு இந்த சுத்திகரிப்பு பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் படையினரது பங்களிப்புடன் ஜூலை மாதம் 28 – 29 ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது தலைமையில் ‘பரிசரய பூஜனிய’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி திட்டமானது மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்த சுத்திகரிப்பு பணிகளில் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், அரச அலுவலகர்கள், நகராட்சி மன்ற ஊழியர்களும் பங்கேற்றுக் கொண்டனர். Nike shoes | adidas Campus 80s South Park Towelie - GZ9177