Header

Sri Lanka Army

Defender of the Nation

31st July 2019 18:30:01 Hours

‘தலதா மாளிகை பெரஹரவை’ முன்னிட்டு இடம்பெற்ற ‘ கொப்பரா’ பூஜைகள்

கண்டி ஶ்ரீ தலதா மாளிகை பெரஹரவை முன்னிட்டு இலங்கை விஜயபாகு காலாட் படையணியினால் தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக 5 டொன் தேங்காய்கள் பெரஹரவின் பாவனைகளின் நிமித்தம் இம் மாதம் (29) ஆம் திகதி காலை வழங்கி வைக்கப்பட்டன.

இந்த தேங்காய்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களினால் தலதா மாளிகையின் நிலம்மே பிரதீப் நிலங்க தீல பண்டார அவர்களுக்கு கோப்பரா பூஜையின் பின்னர் வழங்கி வைக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் D. M. D. C. D குணவர்தன, மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

போயகனையிலுள்ள விஜயபாகு காலாட் படையணியினால் 2015 ஆம் ஆண்டு முதல் கண்டி தலதா மாளிகை எசல பெரஹரவை முன்னிட்டு இந்த தேங்காய்கள் விநியோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்த கோப்பரா பூஜைக்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி அவர்கள் கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலம்மே அவர்களை சந்தித்து கண்டி தலதா மாளிகை எசேல பெரஹரவிற்கான பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினார். trace affiliate link | Men’s shoes