27th July 2019 17:02:41 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான கண்காட்சிகள் நந்திகடாலிலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இம் மாதம் (25) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த கண்காட்சி நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்கள் வருகை தந்து அவர்களினால் இந்த கண்காட்சி கூடாரங்கள் திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள படைப் பிரிவு, படைத் தலைமையகம் மற்றும் படையணிகளினால் நிர்மானிக்கப்பட்ட 30 புதிய கண்டு பிடிப்பு உபகரணங்கள் இந்த கண்காட்சியில் முன்வைக்கப்பட்டன.
கண்காட்சியில் முன் வைக்கப்பட்ட சிறந்த உபகரணங்களை தேர்ந்தெடுப்பதற்கான நடுவர்களாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணியகத்தின் உயரதிகாரி கேர்ணல் S.D உதயசேன, யாழ் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி பூபாலசுந்தரம் மற்றும் கலாநிதி P சசிகேஷ் போன்றோர் இணைந்து இப்போட்டியில் பங்கு பற்றிய வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
இந்த கண்காட்சியில் படைப் பிரிவின் படைத் தளபதிகள், முன்னரங்க பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள் இணைந்திருந்தனர்.
கண்காட்சியில் உபகரணங்கள் முன்வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு
முதலாவது இடம் – 1 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணியைச் சேர்ந்த சார்ஜன் P.W.C பதிரன இவர் மோட்டார் சைக்கிள் சவாரி பாதுகாப்புக்காக மாற்றியமைக்கப்பட்ட தானியங்கி உபகரணம்.
இரண்டாவது இடம் – 641 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த மேஜர் M.P.S குமார இவர் பார்வையற்றவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிநடத்தி செல்லக்கூடிய உதவிக் கோள் உபகரணம்.
மூன்றாவது இடம் – 12 ஆவத இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் ருவன் குமார O.M.I இவர் பாதுகாப்பான தற்பாதுகாப்பகம்.spy offers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify