Header

Sri Lanka Army

Defender of the Nation

27th July 2019 07:32:15 Hours

ஒயமடுவையில் புதிய வீடு திறந்துவைப்பு

மின்னணு ஊடகத்தின் பணிப்பாளர் திருமதி நீத்ரா வீரசிங்க மற்றும் கெபிடல் மகாராஜா குழ நிறுவனத்தின் தலைவர் திரு சாகர பழன்சூரியா மற்றும் தேசிய வீடமைப்பு மேம்பாட்டு திணைக்களத்தின் திரு ரவீந்திர சாரக சமரதுங்க அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவத்தின் பதிவி நிலை பிரதாணியும் இலங்கை இராணுவ கஜாபா படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் கொமாண்டோ படையணியினரும் ஒயமடுவைக்கு (26)ஆம் திகதி விஜயத்தை மேற் கொண்டனர். அதன் பிரகாரம் சிரச நிவச’ இன் மனிதாபிமான திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்துவைத்து வீட்டு பயனாளிக்கு கையழிக்கப்பட்டது.

இந்த திட்டமானது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஒத்துழைப்பிற்கிணங்க கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதற்காக மகாராஜா குழு நிறுவனங்கள் மேற்கொண்ட முன் முயற்சியின் காரணமாக திரு ரவீந்திர சரகா சமரதுங்கே அவர்களால் புதிய வீடு நிர்மாணிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டது.

கஜபா படையணியின் படையினரால் பொறியியல் நிபுணத்துவத்தை பயன்படுத்தி இந்த புதிய வீடு நிர்மாணி;க்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கெபிட்டல் மகாராஜா குழு நிறுவனங்கள் மற்றும் தேசிய வீடமைப்பு மேம்பாட்டு திணைக்களத்தின் அதிகாரிகள் வரவேற்றனர். ஆதனைத் தொடர்ந்து கஜபா படைத் தலைமையகத்தின் நிறைவேற்று கட்டளை தளபதி மஹிந்த ராஜபக்ஷ, திரு ரவீந்திர சரகா சமரதுங்கே மற்றும் குடும்பத்தினர், பயனாளிகளால் சம்பிரதாய மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் ரிப்பன் வெட்டி புதிய வீடு திறந்து வைக்கப்பட்டது.

பிரதான அதிதியாக கலந்து கொண்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கஜாபா படையிணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சனுடன் பயனாளிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டதுடன் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மதிப்புமிக்க பரிசுப் பொதியும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து (26) ஆம் திகதி பிற்பகல் சாலியபுரயில் அமைந்துள்ள கஜபா படையணியின் ‘துரு சிரச’ மரம் நடும் திட்டத்துடன் பதவி நிலை பிரதாணி மற்றும் கஜாபா படையணியின் படையினர்களும் இணைந்து கொண்டன.

இராணுவ ‘துருலிய வெனுவின் அபி” எனும் திட்டத்தின் கீழ் படையினரால் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன. url clone | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals