25th July 2019 17:24:57 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜே.ஆர். அம்பமொஹொடி அவர்கள் கடந்த திங்கட்கிழமை 24 ஆம் திகதி தனது 34 வருட கால சேவை பூர்த்தியினை முன்னிட்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் அவர்களுக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு படையணியின் மத்திய தளபதியான கேர்ணல் டி.ஏ.கே.திசாநாயக்க அவர்களினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இராணுவ அணிவகுப்பு மரியாதையானது படையினரால் மேஜர் ஜெனரல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் யுத்தத்தினால் தாய் நாட்டுக்காக தங்களது உயிர்களை நீத்த படை வீரர்களுக்கான மலர் அஞ்சலியானது செலுத்தப்பட்டது.
அதன் பின்னர் படையினருக்கு மத்தியில் உரையாற்றிய அவர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே, சிரேஷ்ட அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள், மற்றும் ஏனைய அதிகாரிகள் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேஜர் ஜெனரல் ஜே.ஆர். அம்பமொஹொடி அவர்கள் 1985 ஜூன் 6 ஆம் திகதி கெடட் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன் 1986 ஏப்ரல் 25 ஆம் திகதி தியத்தலாவயிலுள்ள இலங்கை இராணுவ கல்லுhரியில் இரண்டாம் லெப்டினனாக பதவி நிலைப் படுத்தப்பட்டார். மேலும் இவர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினருக்கு எதிரான பல யுத்தங்களில் கலந்து கொண்டதுடன், 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலினால் நிரந்கரமாக அங்கவீனமுற்றார். மேலும் அவரது திறமையினை பாராட்டுமுகமாக மேஜர் ஜெனரல் அவர்களுக்கு ரண சூர பதக்கம் வழங்கப்பட்டது.
அனைத்தொடர்ந்து அவர் பயிற்றுவிப்பாளர், ஸ்டாப் மற்றும் கட்டளை அதிகாரி உள்ளிட்ட பல நியமனங்களை வகித்ததோடு, மனித உரிமை மற்றும் மனிதாபிமானமான சட்ட பணிபாளராகவும் கடமையாற்றியுள்ளார்;.
மேலும், அவர் பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, ரணவிரு ரியல் ஸ்டார் டிவி தொடர் போட்டியில் 4 ஆவது இடத்தை சுவீகரித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. best Running shoes brand | Nike for Men