23rd July 2019 16:22:13 Hours
57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 572, 573 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வறிய குடும்பத்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இவர்களுக்கு கோழிக் குஞ்சுகள் இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
விஸ்வமடு மேற்கு பிரமந்தலாறு கிராம சேவகர் பிரிவிற்குரிய பிரதேசத்தில் 16 வறிய குடும்பத்தவர்களை சேர்ந்தவர்களுக்கு 160 கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் 573 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய பிரதேசங்களான பரந்தன், புளியன்பொக்கனை மற்றும் மாவடியம்மன் கிராம சேவக பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து 10 வறிய குடும்பத்தினருக்கு 100 கோழிக் குஞ்சுகள் மற்றும் 10 கோழிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த ஊக்குவிப்புத் திட்டமானது ‘ஹீட் பீட்’ நிறுவனத்தின் நிதியனுசரனையில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன, 573 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, 57 ஆவது படைப் பிரிவின் கேர்ணல் பொது பதவிநிலை அதிகாரி மற்றும் ‘ஹீட் பீட்’ நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | 『アディダス』に分類された記事一覧