Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2019 22:50:26 Hours

விடைபெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை நிகழ்வு

முன்னாள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியும், பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் இராணுவத்திலிருந்து 35 வருட கால சேவைகளை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் இச்சமயத்தில் மத்தேகொடையிலுள்ள பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தில் இம் மாதம் (22) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்களை இப்படையணியின் மத்திய கட்டளை தளபதி பிரிகேடியர் ரவீந்திர டயஸ் அவர்களினால் வரவேற்கப்பட்டார். பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திலுள்ள உள்ள படைவீரர்களது நினைவு தூபிகளுக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் படைத் தளபதி அவர்கள் படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் பங்கேற்றிக் கொண்டார். இறுதியில் கனரக வாகனங்களில் படைத் தளபதியை ஏற்றி மரியாதை செலுத்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் ஹெட்டியாரச்சி அவர்கள் இலங்கை இராணுவத்தில் 1984 ஆம் ஆண்டு இணைந்து 1985 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அதிகாரி நியமனம் பெற்றுக் கொண்டார். பின்னர் இராணுவத்திலுள்ள சில பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் வகித்த பதவிகள் கீழ்வருமாறு

அ. 5 ஆவது பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி யாழ்ப்பாணம் (2000 – 2003)

ஆ. 222 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கந்தளாய் (2010 - 2011)

இ. 22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி திருகோணமலை (2012 -2013)

ஈ. 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பூனானை மட்டக்களப்பு (2014 - 2016)

உ. கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி (2016 - 2017)

ஊ. யாழ் பாதுகாப்பு படைத் தளபதி ( 2017 ஆம் ஆண்டு மார்ச் 28 – 2019) buy footwear | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf