Header

Sri Lanka Army

Defender of the Nation

24th July 2019 08:25:44 Hours

பதவிநிலை பிரதானி அக்குரேகொட கட்டுமாண பணிகளை பார்வையிடுவதற்கு விஜயம்

அக்குரேகொடையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தலைமையக கட்டிட தொகுதிகளை பார்வையிடுவதற்கு இராணுவ பதவிநிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் (23) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் கட்டுமான பணிகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட விமானப்படை அதிகாரி அவர்களினால் இந்த கட்டிட நிர்மான பணிகள் பூர்த்தியாகவில்லையெனவும், வெகு விரைவில் இந்த கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக்கப்படுமென பதவிநிலை பிரதானிக்கு பரிந்துரைக்கப்பட்டன.

மேஜர் ஜெனரல் சில்வா அவர்கள் அவ்விடத்திலிருந்த பணியாளர்களுடன் கட்டுமானத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான விடயங்களை விசாரித்து அந்த வளாகத்தின் பகுதிகளை சென்று பார்வையிட்டார். அத்துடன் கட்டிட நிர்மான பணிகளை உன்னிப்பாகக் கவனித்து, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பல தொடர்பான சில கேள்விகளை வினாவினார். இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சூல அபேநாயக போன்ற உயரதிகாரிகளும் இந்த விஜயத்தின் போது இணைந்திருந்தனர் latest Running | Nike for Men