Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2019 15:12:18 Hours

யாழில் இடம்பெற்ற ‘சக்குரா’ இன்னிசை நிகழ்ச்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்வு இம் மாதம் (12) ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த இன்னிசை நிகழ்ச்சியானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பூரன ஏற்பாட்டில் யாழ் கோட்டைக்கு முன்புள்ள தொல்பொருள் துறை மைதானத்தில் இடம்பெற்றது.

இன்னிசை நிகழ்வினை இலங்கையில் புகழ் பெற்ற இன்னிசை குழுவான ‘சீதுவ சகுரா’ இன்னிசை குழுவினர் வழங்கினர். இதில் புகழ் பெற்ற பாடகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச உயரதிகாரிகளும் இணைந்து கொண்டனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் இந்த இன்னிசை நிகழ்வினை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | First Look: Nike PG 5 PlayStation 5 White Pink Black BQ6472-500 Release Date - SBD