Header

Sri Lanka Army

Defender of the Nation

16th July 2019 17:32:03 Hours

புதிய அன்னை மரியாள் ஆலயத்தின் திறப்பு விழா

கிளிநொச்சியிலுள்ள அம்பல்நகர் சதசகாய அன்னை தேவாலயத்தின் திறப்பு விழா இம் மாதம் ஞாயிற்றுக் கிழமை (14) ஆம் திகதி யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜஷ்டின் ஞானப்பிரகாஷம் அவர்களினால் கிறிஸ்தவ சம்பிரதாய சடங்கு முறைகளின் பின்பு திறந்து வைக்கப்பட்டது.

இந்த திருவிழாவின்போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பக்தர்கள் இணைந்து கொண்டு இறை அருளைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த தேவாலய வளாகத்தினுள் 571 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியினரின் பங்களிப்புடன் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தேவாலய திறப்பு விழா நிகழ்விற்கு அன்னை மரியாள் ஆலயத்தின் அருட் தந்தை J.A ஜேசுதாஸன் அவர்களின் அழைப்பையேற்று கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் A.S ஹேவாவிதாரன, 571 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொது பதவிநிலை அதிகாரி 1 (தொடர்பாடல்), 7 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி போன்றோர் வருகை தந்தனர். bridgemedia | Nike Shoes, Sneakers & Accessories