Header

Sri Lanka Army

Defender of the Nation

11th July 2019 11:25:22 Hours

புகையிரத நிலைய திணைக்களத்தின் அதிபர்களுக்கு தற்போதய பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு

இலங்கை புகையிரத நிலைய திணைக்களத்தின் அதிபர்களுக்கு தற்போதய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வானது இலங்கை இராணுவ அதிகாரிகளால் (09) ஆம் திகதி செவ்வாய்கிழமை இலங்கை புகையிரத நிலைய திரிப்போலி வளாகத்தினுல் நடத்தப்பட்டன.

இந்த திட்டமானது 14 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் பொது பணிப்பாளர் அதிகாரி 1 லெப்டினன்ட் கேணல் M. B. B. N ஹேரத் அவர்களால் விரிவுரை வழங்கப்பட்டது. இந்த செயலமர்வில் 40 புகையிரத நிலைய திணைக்களத்தின் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் மேலும் ஒரு செயலமர்வு (10) ஆம் திகதி புதன்கிழமை 30 புகையிரத நிலைய திணைக்களத்தின் அதிபர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றதுடன். இந்த செயலமர்வானது இரண்டாம் கட்டமாக மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. bridgemedia | Footwear