Header

Sri Lanka Army

Defender of the Nation

10th July 2019 22:02:23 Hours

11 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி நியமிப்பு

கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த செனரத் பண்டார அவர்கள் 11 ஆவது படைப் பிரிவின் 8 ஆவது புதிய படைத் தளபதியாக இம் மாதம் (9) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதத்தின் பின் தனது கடமையை பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட படைத் தளபதிக்கு குண்டசாலையிலுள்ள படைத் தலைமையக வளாகத்தினுள் 2 ஆவது சிங்கப் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் இடம்பெற்று அதன் பின்பு படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Adidas shoes | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival