Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2019 15:25:19 Hours

பங்களாதேஷத்தின் மூத்த உயரதிகாரிகள் கண்டிக்கு விஜயம்

சபுகஸ்கந்தையிலுள்ள பாதுகாப்புசேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ இராணுவ அதிகாரிகளுடன் வருகை தந்த உயரதிகாரியான மேஜர் ஜெனரல் முகமட் எனாயேத் உல்லா அவர்கள் இம் மாதம் (5) ஆம் திகதி கண்டிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

கண்டிக்கு வருகை தந்த உயரதிகாரியை 111 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் W.M.W.D.R.S.P அலுவிஹார மற்றும் பதவிநிலை அதிகாரி 1 தரத்திலிருக்கும் லெப்டினன்ட் கேர்ணல் S.U.K.D சேனாநாயக போன்ற அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் வருகை தந்த உயரதிகாரி கண்டி தலதா மாளிகை மற்றும் கண்டியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசலிற்கு விஜயத்தை மேற்கொண்டார்.Nike footwear | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp