Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2019 19:08:18 Hours

வீரவிலையில் படையினர்களுக்கு தங்குமிட விடுதிகள் திறந்து வைப்பு

இலங்கை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படையினர்களின் சுபசாதனை நிமித்தம் ‘டேங் பிரீஷ்’ எனும் பெயரில் சுற்றுலா விடுதி இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந்த விடுதியானது இராணுவ படைக்கலச் சிறப்பணியின் படைத் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து திறந்து வைத்தார்.

மூன்று அறை வசதிகளுடன் உள்ளடக்கப்பட்ட இந்த விடுதியானது மில்லியன் 9.2 ரூபாய் செலவில் இராணுவ படைக்கலச் சிறப்பணியின் நிதி அனுசரனையுடன் இந்த விடுதி அமைக்கப்பட்டன.

இங்கு விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி தனது வருகையை நினைவு படுத்தும் முகமாக மரக்கன்றொன்றையும் இந்த வளாகத்தினுள் நாட்டி வைத்தார்.

பின்னர் இராணுவ தளபதி அவர்கள் இராணுவ படைக்கலச் சிறப்பணியின் ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் உட்பட படையினருடன் குழுப் புகைப்படத்தில் இணைந்து கொண்டார்.

மேலும் இச் சந்தர்ப்பத்தில் இராணுவ விடுதி மற்றும் தங்குமிட பராமரிப்பு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Mysneakers | New Releases Nike