Header

Sri Lanka Army

Defender of the Nation

04th July 2019 13:38:50 Hours

படையினரால் நிர்மாணிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சுரூபம்

தேவன்பிடி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய நிர்வாகத்தின் வேண்டுகோளிற்கிணங்க கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது பணிப்புரைக்கமைய 651 ஆவது படைத்; தளபதி கேர்ணல் சமத் வரகாகொட அவர்களின் பூரண தலைமையில் இந்த கத்தோலிக்க திருச்சுரூப நிர்மாணபணிகள் ஜூன் மாதம் (28) ஆம் திகதி நிறைவடைந்து திறந்து வைக்கப்பட்டது.

அதற்கமைய 65 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ.பி.எஸ் அமரசிங்க அவர்களின் திறமை மற்றும் பக்தியால் இந்த கத்தோலிக்க திருச்சுரூபம் பாடசாலை வளாகத்தில் 9 நாட்களில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த திருச்சுரூபம் கடந்த (28) ஆம் திகதி வெள்ளிக்கிழமை 651 ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் தேவன்பிட்டி பிரான்ஸ் சேவியர் கத்தோலிக்க தேவாலயத்தின் கிறிஸ்தவ பாதிரியார் டெனி கெலிஸ்ட் அவர்களால் போதனையும் வழங்கப்பட்டது. Running sport media | Nike React Element 87