02nd July 2019 09:10:03 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது வழிக்காட்டலின் கீழ் 24 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சி ஜூன் மாதம் (29) ஆம் திகதி அம்பாறையிலுள்ள எச் எம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இன்னிசை நிகழ்ச்சி 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது பூரன ஏற்பாட்டுடன் அம்பாறை சிவில் சமூக அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.
இன்னிசை நிகழ்ச்சிகளை இலங்கையில் பிரசித்தி பெற்ற ‘சீதுவ சகுரா’ இன்னிசை குழுவினர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிகளுக்கான அறிவிப்புகளை நதீகா கருணாநாயக மற்றும் சுரங்கி கொடிதுவக்கு அவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பிரசித்திபெற்ற பாடகர்களான சமன் டீ சில்வா, சாலக சம்புபத்தி பெரேரா, நுவன் குணவர்தன, எம் ஜி தனுஷ்க, நிருந்து அம்சக்யா, தமித அபேரத்ன மற்றும் சானிகா வீரசிங்க போன்றோர் பாடல்களை வழங்கியிருந்தனர்.
அம்பாறை, உகன, இங்கினியாகல, கிங்குரான, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களிலிருந்து பெரும்பாலான மக்கள் கூட்டம் இந்த இன்னிசை நிகழ்ச்சியை பார்வையிட வந்திருந்தனர்.
இந்த இன்னிசை நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.Sneakers Store | Nike Releases, Launch Links & Raffles