Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2019 19:24:48 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் முன்பள்ளி திறந்து வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ பொறியியல் சேவைப் படையணியினால் பண்டாரவெலையில் முன்பள்ளி கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிடங்கள் நிர்மானிப்பதற்காக ஹேமாஷ் குரூப் நிறுவனத்தினர் நிதியுதவி அனுசரனைகளை சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் இந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.

மேஜர் ஜெனரல் குமுது பெரேராவுடன் கலந்தாலோசித்து ஹேமாஷ் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளரான திருமதி ஷிரோமி மசகோரலா அவர்களினால் குறைந்த வருமானத்தை பெறும் மாணவர்களுக்காக இந்த முன்பள்ளி கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட்டு ஜூன் மாதம் (28) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன.

இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி வடுகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் சிவில் தொடர்பாடல் அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றது. Sport media | Nike