Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2019 18:24:48 Hours

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையக மற்றும் அதன் கீழுள்ள படைத் தலைமையகங்களில் சேவையாற்றும் சிவில் சேவகர்களுக்கான அறிவூட்டல் பயிற்சிப் பட்டறை

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைத் தலைமையகங்களில் சேவையாற்றும் 180 சிவில் சேவகர்களுக்கான செயற்பாடுகள் அனுகுமுறைகள் நேரான சிந்தனை தொடர்பான விழிப்புட்டும் அறிவூட்டல் பயிற்சிப் பட்டறையானது கடந்த செவ்வாய்க் கிழமை (25) இடம் பெற்றது.

அந்த வகையில் இப் பயிற்சிப் பட்டறையானது முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டு இராணுவ சிவில் நிர்வாக பணிப்பகத்தின் பங்களிப்புடன் இடம் பெற்றுள்ளது.

இதன் போது தேசிய சமூக அபிவிருத்தி நிலையத்தின் பயிற்றுவிப்பு அதிகாரியான திரு அயன் பிரசாத் ஜயசேகர அவர்களால் முல்லைத் தீவு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் சேவகர்களுக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் சிவில் நிர்வாகப் பணிப்பக பணிப்பாளரான திரு எல் டீ சி மஹாநாம மற்றும் இப் பணிப்பகத்தின் பயிற்றுவிப்பு அதிகாரியான திரு எம் பி பெரியலகே பேன்றோர் கலந்து கொண்டனர். url clone | THE SNEAKER BULLETIN