Header

Sri Lanka Army

Defender of the Nation

28th June 2019 20:18:41 Hours

தேராகந்தல் முன் பாடசாலை சிறார்களுக்கு புத்தகம் நன்கொடை வழங்கும் நிகழ்வு

65 ஆவது படைப்பிரிவிற்குட்பட்ட 653 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் ஜே.ஏ.ஜே.எல்.பி உடோவிட்ட அவர்களின் மேற்பார்வையின் கீழ் இப் படைப் பிரிவின் படையினர் மற்றும் 17ஆவது (தொண்டர்) இலங்கை இராணுவ காலாட் படையணியின் படையினரால் மத்திய கொழும்பு ஹவுஸ் மனைவிகள் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் கலைமகள் தேராகந்தல் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பத்தின் முன் பாடசாலை செல்லும் சிறார்களுக்கு அப்பியாசப் புத்தகம் உட்பட பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வானது 65 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களின் ஆலோசனைக்கமைய ஒழுங்கமைக்கப்பட்டது.

இதன் போது முன் பாடசாலை சிறார்களுக்கு 50 பாடசாலை உபகரணங்கள் உட்பட பரிசு பொதிகள் வழங்கப்;பட்டதுடன் 4 ஆசிரியர்களுக்கும் 4 பரிசு பொதிகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் முன் பாடசாலை சிறார்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். Mysneakers | Mens Flynit Trainers