Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2019 13:43:50 Hours

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தெமடம்பிடிய நியமிப்பு

சபுகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் கடமைப் பொறுப்பேற்றார். இவர் இக் கல்லூரியின் 7ஆவது கட்டளை தளபதியாக காணப்படுவதுடன் கடந்த செவ்வாய்க் கிழமை (20) மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது கடமைப் பொறுப்பை ஏற்றார்.

அதனைத் தொடந்து இவ் அதிகாரியவர்கள் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப் பொறுப்பை ஏற்றதுடன் இதன் போது பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் இப் படைத் தலைமையகத்தில் மரக் கன்றை நட்ட படைத் தளபதியவர்கள் பாதுகாப்பு சேவைக் கட்டளை தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கை புதிய படைத் தளபதியவர்கள் முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோருக்கு வழங்கினார்.

மேலும் மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடம்பிடிய அவர்கள் நாளந்தக் கல்லூரியில் கல்வி பயின்றதுடன் இவ் அதிகாரியவர்கள் பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் ஸ்டாப் கல்லூரியின் தளபதியாக கடமைப் பொறுப்பை ஏற்க முன்னர் 56ஆவது படைத் தலைமையக தளபதியாக சேவையாற்றியுள்ளார். இவ் அதிகாரியவர்கள் இலங்கை இராணுவ வுஷூ சங்கத்தின் தலைவராகவும் காணப்படுகின்றார். url clone | Nike Air Force 1'07 Essential blanche et or femme - Chaussures Baskets femme - Gov