Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2019 17:13:45 Hours

தேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கத்தால் இராணுவ வைத்தியசாலையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

ஜனாதிபதி பணிக்குழுவின் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான தேசிய திட்டத்திற்கு அமைவாக தேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கம் மற்றும் இராணுவ உளநலப் பணிப்பக அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் தேசிய போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினருக்கான விழிப்புணர்பு கருத்தரங்கானது கடந்த வியாழக் கிழமை (27) கொழும்பு இராணுவத் தலைமையத்தில் 30 அதிகாரிகள் மற்றும் 210 படையினர் பங்கேற்போடு இடம் பெற்றது.

இவ் விழிப்புணர்வு கருத்தரங்கானது தேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கத்தின் தொடர்பாடல் அதிகாரியான திரு சாமர பிரதீப் கருணாரத்ன அவர்களால் நிகழ்த்தப்பட்டதோடு இந் நிகழ்வில் தேசிய போதைப்பொருள் தடுப்பு சங்கத்தின் தலைவரான போராசிரியர் சமன் அமரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந் நிகழ்வில் இராணுவ தலைமையத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரல்மேஜர் ஜெனரல் இந்திரஜித் வித்தியாநந்த இராணுவ வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் பாராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் பி பி ரந்தெனிய மற்றும் உளநலப் பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் எம் எம் கித்சிரி போன்றோர் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் மதுசாரம் மற்றும் புகைத்தல் போன்றவற்றின் பாவனையை குறைத்து இலங்கையில் போதைப் பொருளை இல்லாதொழித்து போதைவஸ்தற்ற நாடாக மாற்றுவதை நோக்காகக் கொண்டு கௌரவமிக்க அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கிணங்க தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்கானது நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் படைப் பிரிவுகளில் மேற்கொள்ளபட்டது. இவ்வாறான விழிப்புணர்வு கருத்தரங்குகள் இராணுவப் படையினரால் கடந்த மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. best Running shoes | Air Jordan