Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd June 2019 14:18:03 Hours

தமது இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் 11 படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்கள்

இராணுவத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய குறிப்பாக வினியோக மற்றும் நிர்வாக சேவையை திறமாக கையாண்ட இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ள 11 படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்களை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனாநாயக்க அவர்கள் இன்று திங்கட் கிழiமை (24) காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து பாராட்டியுள்ளதுடன் தமது காரியாலத்தில் இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதியவர்கள் இவர்களது எதிர்கால திட்டங்கள் மற்றும் கடந்தகால அனுபவங்கள் போன்றன தொடர்பில் கலந்துரையாடினார். இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியவர்கள் இவர்களது குடும்பத்தாரிற்கான வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சேவை ஓய்வின் பின்னர் நாட்டிற்கு அவர்கள் சுமையாக இருக்கமாட்டார்கள் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

அவ்வாறு ஓய்வு பெறும் 11 படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்கள் இராணுவத் தளபதியவர்களுக்கு இதுவரை காலமும் தமது சேவையின் போது கனவாக காணப்பட்ட இராணுவத் தளபதியின் சந்திப்பானது தமது வாழ்நாள் முழுவதும் மாறான இனிய நினைவாக காணப்படும் எனவும் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

இச் சந்திப்பில் ஆளனி நிருவாக பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர இராணுவத் தலைமையக சார்ஜன்ட் மேஜர் போன்றோரும் இதன் போது கலந்து கொண்டனர் Sportswear free shipping | Nike Off-White